2022 ஆம் ஆண்டின் இன்விக்டஸ் போட்டிகள் நெதர்லாந்தின் தி ஹேக் என்ற நகரில் தொடங்கப் பட்டன.
முதலாவது இன்விக்டஸ் போட்டிகளானது 2014 ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடத்தப் பட்டது.
இப்போட்டிகளானது 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓர்லான்டோ நகரிலும், 2017 ஆம் ஆண்டில் கனடாவின் டொரோன்டோ நகரிலும், 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் நடத்தப் பட்டன.
2023 ஆம் ஆண்டின் இன்விக்டஸ் போட்டிகளை ஜெர்மனியின் டுசெல்டோர்ஃப் நகரம் நடத்த உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப் படும் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற வகையில் இது காயமடைந்த, பாதிப்படைந்த மற்றும் நோய் வாய்ப்பட்ட இராணுவப் போர் வீரர்கள் மற்றும் சேவைப் பணியாளர்களுக்காக வேண்டி நடத்தப்படும் ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியாகும்.
கவிஞர் வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லே என்பவரின் ‘இன்விக்டஸ்’ என்ற கவிதையை உத்வேகமாகக் கொண்டு இப்போட்டிகள் உருவாக்கப்பட்டன.