இந்தியா மற்றும் பிரான்சு இடையேயான தொடக்கநிலை நிறுவனங்களின் முதலீட்டு வசதிகள் மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding - MoU) இன்வெஸ்ட் இந்தியா மற்றும் பிஸினஸ் பிரான்சு ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
இன்வெஸ்ட் இந்தியா மத்திய அரசின் அதிகாரப்பூர்வ முதலீட்டு மேம்பாடு மற்றும் எளிதாக்குதல் நிறுவனம் ஆகும்.
இது வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy and Promotion - DIPP) கீழ் எடுக்கப்பட்ட இலாப நோக்கமில்லா துணிகர முயற்சியாகும்.
பிஸினஸ் பிரான்சு, பொருளாதார விவகாரங்கள் அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் ஆகியோர் மேற்பார்வையில் பிரான்சு அரசால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.