TNPSC Thervupettagam
February 17 , 2022 921 days 950 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது இன்ஸ்பைர்சாட் – 1 எனப்படும் ஒரு செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியது.
  • இந்தியா, அமெரிக்கா, தாய்வான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினால் இன்ஸ்பைர்சாட் – 1 உருவாக்கப்பட்டது.
  • இன்ஸ்பைர்சாட் – 1 (INSPIRE Sat – 1) என்பதன் விரிவாக்கம் International Space Program in Research and Education Satellite – 1 (ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சர்வதேச விண்வெளி செயற்கைக்கோள் திட்டம்) என்பதாகும்.
  • இந்தச் செயற்கைக்கோளானது போல்டர் எனுமிடத்திலுள்ள கொலராடோ பல்கலைக் கழகத்திலுள்ள வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து இந்திய விண்வெளி அறிவியல் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது PSLV-C52 எனும் துருவ செயற்கைக்கோள் ஏவூர்தி மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்