TNPSC Thervupettagam

இப்ராஹிம் பரிசு- எல்லன் ஜான்சன் சர்லீப்

February 16 , 2018 2376 days 752 0
  • முன்னாள் லைபீரிய அதிபரான எல்லன் ஜான்சன் சர்லீப்–பிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்கத் தலைமைத்துவத்தில் சாதனை புரிந்தமைக்கான இப்ராஹிம் பரிசு (Ibrahim Prize for Achievement in African Leadership) வழங்கப்பட்டுள்ளது.
   
  • எல்லன் ஜான்சன் சர்லீப் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் தலைவராவார் (first elected female head of state in Africa).
  • மேலும் எல்லன் ஜான்சன் சர்லீப் இவ்விருதைப் பெறும் முதல் பெண் தலைவருமாவார்.
  • ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிக்காலத்தில் மெச்சத்தகுந்த முறையில் சிறப்பாக தலைமையாற்றிய தலைவர்களுக்கு ஆப்பிரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதே ஆப்பிரிக்கத் தலைமைத்துவத்தில் சாதனை புரிந்தமைக்கான இப்ராஹிம் பரிசு ஆகும்.
  • பரிசுக்குத் தகுதியானவர் கடைசி மூன்றாண்டுகளில் தன்னுடைய பதவிக்காலத்தை முடித்திருக்க வேண்டும்
  • எல்லன் ஜான்சன் சர்லீப் ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் 12 ஆண்டுகள் அதிபராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவரது பதவிக்காலம் இவ்வாண்டின் ஜனவரி 22ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்