TNPSC Thervupettagam

இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கான புவிசார் குறியீடு

February 26 , 2021 1240 days 714 0
  • இமயமலை இளஞ்சிவப்பு உப்பைப் புவிசார் குறியீடாக பதிவு செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
  • புவிசார் குறியீடு என்பது சிறப்புத் தயாரிப்புகளுக்கு கொடுக்கப்படும் அடையாளம் ஆகும்.
  • இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பின்புலத்தைக் கொண்டுள்ளது மற்றும் அந்தப் பிராந்தியத்தின் தோற்றம் சார்ந்த குணங்கள் மற்றும் நன்மதிப்பைக் கொண்டுள்ளது.
  • இந்த விலை மதிப்புடைய உப்பு பஞ்சாபில் உள்ள உப்புத் மலைத் தொடரிலிருந்து எடுக்கப் படுகிறது.
  • இந்த மலைத் தொடர் போடோஹார் பீடபூமியின் தெற்கிலும் ஜீலம் ஆற்றின் வடக்கிலும் நீண்டுள்ளது.
  • முன்னதாக பாஸ்மதி அரிசியை இந்தியாவின் உற்பத்தியாக பதிவு செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக, பாகிஸ்தான் நாடானது ஐரோப்பிய ஒன்றியத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்