TNPSC Thervupettagam

இமயமலை பள்ளத்தாக்குக் காற்று

December 19 , 2023 342 days 213 0
  • அதிக உயரத்தில் உள்ள பனிக்கட்டிகளில் அதிக வெப்பநிலையானது மோதும் போது, குறைந்த உயரத்தில் உள்ள பகுதிகளை நோக்கி குளிர்ந்த காற்றை வீசும் ‘பள்ளத் தாக்குக் காற்று’ (இறங்குக் காற்று, புவி ஈர்ப்புக் காற்று) தூண்டப்படுகிறது என்று அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • மலைகளுக்கு மேலே பாயும் காற்றுக்கும், பனிக்கட்டிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் குளிர்ந்த காற்றுக்கும் இடையே வெப்பநிலை இடைவெளி உருவாக்கப் படுகிறது.
  • இது பனிப்பாறையின் மேற்பரப்பில் கட்டுக்கடங்காத வெப்பப் பரிமாற்றம் மிகவும் அதிகரிப்பதற்கும், மேற்பரப்புக் காற்று அதிகமாக குளிர்ச்சி அடைவதற்கும் வழி வகுக்கிறது.
  • மிதவெப்பக் காற்று குளிர்ச்சியடைந்து மிக அடர்த்தியாக மாறுவதால், அது கீழிறங்கி, மலைச் சரிவின் தாழ் மட்ட அண்மைப் பகுதிகளில் பள்ளத்தாக்குக் காற்றை மிகவும்  தூண்டுகிறது.
  • இந்த நிகழ்வு சில பகுதிகளில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்கலாம் என்றாலும், வரவிருக்கும் பத்தாண்டுகளில் அதன் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் ஏதும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்