TNPSC Thervupettagam
July 15 , 2020 1468 days 667 0
  • இமயமலை வயாகரா என்றும் அழைக்கப்படும் ஒபியோகார்டைசெப்ஸ் சினென்சிஸ் ஆனது ஒரு வகைப் பூஞ்சையாகும்.
  • இது உலகின் மிகவும் விலை உயர்ந்த பூஞ்சையாகும்.
  • இது இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமிகளை மட்டுமே பூர்வ வாழ்விடமாக கொண்டு காணப்படுகின்றது. இது சீனா, நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றது.
  • இது இந்தியாவில் மிக முக்கியமாக உத்தரகாண்டின் பித்தோர்கார்க் மற்றும் சமோலி போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  • சமீபத்தில் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் (IUCN - International Union for Conservation of Nature) அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினங்களுக்கான” சிவப்புப் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது.
  • IUCN ஆனது இந்தப் பூஞ்சையை “அழிவாய்ப்பு இனமாக” வகைப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்