இமயமலைப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சி - 5 கருப் பொருள் அறிக்கைகள்
August 25 , 2018 2285 days 862 0
இமயமலையின் தனித்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான சவால்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக இந்திய இமயமலைப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சி மீதான 5 கருப்பொருள் அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது (IHR - Indian Himalayan Region).
இந்த அறிக்கை 5 கருப்பொருள் பகுதிகளில் உள்ள சவால்களை பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையானது முக்கியத்துவம், சவால்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்முறைகள் மற்றும் எதிர்கால வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கிறது.
ஜூன் 2017-ல் நிதி ஆயோக்கினால் உருவாக்கப்பட்ட 5 பணிக் குழுக்கள் இந்த அறிக்கைகளை தயாரித்துள்ளன.
அந்தப் பகுதிகளாவன
நீர்ப் பாதுகாப்பிற்காக இமயமலையில் உள்ள நீரூற்றுகளின் இருப்பு மற்றும் அவற்றைப் புதுப்பித்தல்.
இந்திய இமயமலைப் பகுதிகளில் நீடித்த சுற்றுலா
மாற்று சாகுபடிகளுக்கான (Shifting Cultivation) மாற்று அணுகுமுறை
இமயமலையில் உள்ளோருக்கான திறன் மற்றும் தொழில்முனைவோரை வலிமைப்படுத்துதல்.