TNPSC Thervupettagam

இமயமலைப் பனிப்பாறை ஏரிகளின் எழுச்சி

November 7 , 2024 15 days 134 0
  • இமயமலைப் பனிப்பாறை ஏரிகள் வேகமாக விரிவடைந்து, சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
  • 2011 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்த ஏரிகள் பரப்பளவில் 10.81% விரிவடைந்தன என்பதோடு இது பெரும்பாலும் பருவநிலை மாற்றத்தினால் உந்தப்பட்டது.
  • இந்திய நிலப்பரப்பு பக்கம் அமைந்த பனிப்பாறை ஏரிகள் அதே காலகட்டத்தில் 33.7% விரிவடைந்துள்ளன.
  • இந்தியாவில் மட்டும் 67 ஏரிகள் அளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்து உள்ள நிலையில் இது அவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளதைக் குறிக்கிறது.
  • இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் தோராயமாக 1,962 ஹெக்டேராக இருந்த பனிப்பாறை ஏரிகளின் பரவலானது, 2024 ஆம் ஆண்டில் 2,623 ஹெக்டேராக விரிவடைந்தது.
  • ஒட்டு மொத்த இமயமலைத் தொடர் முழுவதும், 2011 ஆம் ஆண்டில் சுமார் 533,401 ஹெக்டேராக இருந்த பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு ஆனது 2024 ஆம் ஆண்டில் 591,108 ஹெக்டேராக விரிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்