இமயமலையின் 4 சிகரங்களுக்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர்
October 23 , 2018 2371 days 834 0
கங்கோத்ரி பனிப்பாறைகளுக்கு அருகில் உள்ள 4 இமயமலைச் சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இந்த சிகரங்கள் அடல் 1, 2, 3 மற்றும் 4 என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர் தொலைவில் கங்கோத்ரி பனிப்பாறைக்கு வலது புறமாக அமைந்துள்ளன.
கர்னல் பிஷ்ட் தலைமையிலான மலையேறும் குழு சமீபத்தில் புதிதாக பெயரிடப்பட்ட சிகரங்களை அடைந்து ஒவ்வொரு சிகரத்திலும் மூவர்ணக் கொடியை ஏற்றின.
கர்னல் பிஷ்ட் நேரு மலையேறும் கல்வி நிறுவனத்தில் (Nehru Institute of Mountaineering) முதல்வராக உள்ளார்.
இந்த மலையேற்றமானது நேரு மலையேறும் கல்வி நிறுவனம் மற்றும் சுற்றுலாத் துறையால் இணைந்து நடத்தப்பட்டது.