TNPSC Thervupettagam

இமயமலையின் 4 சிகரங்களுக்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர்

October 23 , 2018 2096 days 692 0
  • கங்கோத்ரி பனிப்பாறைகளுக்கு அருகில் உள்ள 4 இமயமலைச் சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
  • இந்த சிகரங்கள் அடல் 1, 2, 3 மற்றும் 4 என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர் தொலைவில் கங்கோத்ரி பனிப்பாறைக்கு வலது புறமாக அமைந்துள்ளன.
  • கர்னல் பிஷ்ட் தலைமையிலான மலையேறும் குழு சமீபத்தில் புதிதாக பெயரிடப்பட்ட சிகரங்களை அடைந்து ஒவ்வொரு சிகரத்திலும் மூவர்ணக் கொடியை ஏற்றின.
  • கர்னல் பிஷ்ட் நேரு மலையேறும் கல்வி நிறுவனத்தில் (Nehru Institute of Mountaineering) முதல்வராக உள்ளார்.
  • இந்த மலையேற்றமானது நேரு மலையேறும் கல்வி நிறுவனம் மற்றும் சுற்றுலாத் துறையால் இணைந்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்