இமயமலை-திபெத்திய பீடபூமியில் தார் உருண்டைகள் இருப்பதாக ஓர் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
இவை சிறிய அளவில் ஒளி உறிஞ்சும் கார்பனேசியத் துகள்கள் ஆகும். இவை பனி மற்றும் பனிக்கட்டிகளில் உயிர்வாழ் அல்லது புதைபடிவ எரிமங்களை எரிப்பதால் உருவாகின்றன.
இவை பனிப்பாறை உருகுவதை விரைவுபடுத்துகின்றன.
இவை புதைபடிவ எரிமங்களை எரிக்கும் போது வெளியேற்றப்படும் பழுப்புக் கரிமத்திலிருந்து உருவாக்கப் படுகின்றன.