இமயமலையில் உள்ள பெரும்பாலான பறவைகள் குளிர்காலத்தில் கீழ்நோக்கி அமைந்த பகுதிகளுக்கு நகர்கின்ற அதே சமயம் தாழ்வான உயரத்தில் உள்ள பறவை உயிரினங்களின் ஒரு சிறிய குழு அதிக உயரத்தில் உள்ள பகுதிகளை நோக்கி நகர்கிறது.
கிழக்கு மற்றும் மேற்கு இமயமலையில் உள்ள 65 சதவீத இனங்கள் ஆனது, அதிக பருவநிலை அல்லது உச்ச கட்ட பருவ காலத்தில் தென்பட்ட மற்ற பறவை இனங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றின் இனங்களுக்குள்ளே பருவகால உயரம் சார்ந்த இட மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
சுமார் 10 சதவிகித இனங்கள் உயரமான பகுதிகளை நோக்கி நகர்கின்ற நிலையில், அவற்றில் 35 சதவிகித இனங்கள் உயரம் சார்ந்த எந்தவித இட மாற்றத்தையும் மேற் கொள்வதில்லை.
மேற்கு இமயமலையில் உள்ள 221 இனங்களில், 57 சதவீத இனங்கள் தாழ்வான பகுதிகளை நோக்கி நகர்வதாகவும், ஐந்து சதவீத இனங்கள் உயரமான பகுதிகளை நோக்கி நகர்வதாகவும் பதிவாகியுள்ளது.
ஏறத்தாழ 38 சதவீத இனங்கள் உயரம் சார்ந்த எந்தவித இட மாற்றத்தையும் மேற் கொள்வதில்லை.