இந்திய தேர்தல் ஆணையம் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதியினை அறிவித்துள்ளது. நடப்பிலுள்ள இமாச்சல பிரதேச அரசின் ஆட்சிக்காலம் ஜனவரி 7,2017 அன்று முடிவடைகிறது.
68 சட்டமன்ற தொகுதிகளுடைய இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் நவம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு, டிசம்பர் 18 ஆம் தேதிகள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Mode Code Of Conduct-MCC) உடனடியாக இமாச்சல பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ளன.
கோவாவிற்கு அடுத்து இந்த ஆண்டில் 2 வது மாநிலமாக இமாச்சல பிரதேசத்தில் 100% வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை (VVPAT-Voters verification Paper Audit Trail ) பயன்படுத்தப்பட உள்ளது.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, சோதனை அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் வாக்குச் சாவடி சமவாய்ப்பற்ற (random) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு VVPAT சீட்டுகள் எண்ணப்படும்.
தேர்தல்நடத்தைவிதிமுறைகள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC-Model Code of Conduct) தன்னார்வ “தார்மீக நடத்தை நெறிகள்” (Moral Code of Conduct) எனவும் அழைக்கப்படும்.
இது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய அரசியல் கட்சிகள், தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வெளியிடப்படும் நெறிமுறைகளின் தொகுப்பாகும். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தல் நடத்தை நெறிமுறைகளை நிர்வகிக்க எந்த ஒரு சட்ட அமைப்பும் கிடையாது.
தேர்தல் அட்டவணைகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
தேர்தல் பிரச்சார காலத்தில் சமூகங்களுக்கிடையே பகைமையை உண்டாக்கல் போன்ற நடத்தை விதிமுறை மீறல்கள் இந்திய தண்டணையியல் சட்டம் (IPC-Indian Penal Code) உள்ளிட்ட நடப்பிலுள்ள சட்டங்களின் மூலம் தீர்க்கப்படும்.
இந்த நடத்தை விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை என வழிகாட்டுதல் இருக்கும். அவற்றின் மீதான அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செயல்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் அல்லது மாநிலத் தேர்தல் ஆணையம் தீர்ப்பாளராக இருந்து கையாளும்.