காண்பதற்கு மிகவும் அரிய பல்லாஸ் பூனையின் முதல் புகைப்பட ஆதாரம் ஆனது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கிடைத்துள்ளது.
பல்லாஸ் பூனைகள், மத்திய ஆசியாவின் புல்வெளிகளை ஒரு முக்கிய வாழ்விடமாகக் கொண்ட சிறிய காட்டுப் பூனைப் பேரினமாகும்.
1776 ஆம் ஆண்டில் முதன்முதலில் இது குறித்து விவரித்த பீட்டர் சைமன் பல்லாஸ் என்ற ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த ஒரு இயற்கை ஆர்வலரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.
இது பெரும்பாலும் தனியாகவும் இரவு நேரங்களிலும் நடமாடும் பூனை இனமாகும்.
இது IUCN அமைப்பினால் ''அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்' என வகைப் படுத்தப் பட்டுள்ளது.