இமாலயப் பகுதியில் ஏற்படும் மேக வெடிப்பு ஆபத்துக்களைக் கண்காணித்து முன்கூட்டியே அதைக் கணிக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உத்தரகாண்டின் தெகிரி மாவட்டத்தில் இமாலய மேக ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த ஆய்வு மையம் பாதுஷாஹிக்தாவுல் நகரின் எஸ்ஆர்டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. தற்போது இது சோதனை ஓட்டத்தில் இருக்கின்றது.
அதி உயரப் பகுதிகளில் செயல்படும் வகையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையாலும் (Indian Science and Technology Department) கான்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தாலும் இணைந்து மேகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்திடும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நாட்டின் இரண்டாவது ஆய்வு மையம் இதுவாகும்.