தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து புதிய தாவர இனத்தை இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பின் (BSI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்திய ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகை பிரிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக டாக்டர் எஸ் கருப்புசாமி (மதுரா கல்லூரி, தமிழ்நாடு) என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டது.
இம்பேடியன்ஸ் என்பது உலகளவில் 1,000க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட ஒரு பரவலான பேரினம் என்ற நிலையில், அதில் இந்தியாவில் 280க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன.
இது வெப்பமண்டல ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா, இலங்கை மற்றும் சீனாவில் பரவலாக உள்ளது.
தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனம் அறியப்பட்ட அனைத்து வகையான இம்பேடியன்களிலிருந்தும் வேறுபடுகின்றன.
இது இம்பேடியன்ஸ் பைகார்னிஸ் இனத்தை ஒத்ததாக உள்ளது, ஆனால் இலை அளவு, பூக்களின் எண்ணிக்கை, நீளம் மற்றும் பூ அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது.