காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) இம்ரான் பிரதாப்காதிக்கு எதிரான குஜராத் காவல்துறை வழக்கை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் ஒரு பிரச்சினையினைத் தூண்டும் வகையில் ஒரு கவிதையை வெளியிட்டதற்காக அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது என்ற ஒரு நிலையில் இந்தத் தீர்ப்பானது பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவான ஒரு வரவேற்கத்தக்க தலையீடு ஆகும்.
பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 196 (IPC பிரிவு 153A) என்ற ஒரு பிரிவினைப் பயன்படுத்த முடிவு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு வழி காட்டியாக இருக்கும்.
196 என்ற பிரிவானது மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறுக் குழுக்களிடையேப் பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பாதகமான செயல்களைச் செய்தல் தொடர்பான சில விதிமுறைகளைக் கொண்டுள்ளது.