35 அரசாங்கத் திருத்தங்களை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டு நிதியியல் மசோதா ஆனது, இயங்கலை விளம்பரங்களுக்கான 6 சதவீத எண்ணிம வரியை நீக்க உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிதியியல் மசோதாவின் திருத்தங்களின் ஒரு பகுதியாக இயங்கலை வழி விளம்பரங்களில் சமனீட்டு வரியை ரத்து செய்ய மத்திய அரசு முன்மொழிந்தது.
வரையறையின்படி, ஒரு சமனீட்டு வரி என்பது ஓர் உள்நாட்டு இணைய வழி வணிக நிறுவனத்தின் வரி கூறுகளையும், வெளிநாட்டு இணைய வழி வணிக நிறுவனத்தின் வரி கூறுகளையும் ‘சமப்படுத்தும்’ ஒரு வரியாகும்.
“கூகுள் வரி” என்று அழைக்கப்படும் இந்த வரிவிதிப்பு ஆனது கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற சில வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களால் செய்யப்படும் இயங்கலை வழி விளம்பரச் சேவைகளைப் பாதிக்கிறது.
இந்த 6 சதவீத வரியானது 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்நாட்டில் எண்ணிமச் சேவைகளை வழங்கும் இணைய தளங்கள் மீது 2 சதவீத அளவு சமனீட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.