கௌஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (IIT-G) அறிவியல ஆராய்ச்சியாளர்கள் 'LEAP' என்ற புதுமையானதொரு இயந்திர கற்றல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது குறைகடத்திகள் உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படும் மின்னணு வடிவமைப்பு தானியக்க (EDA) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
600 பில்லியன் டாலர் மதிப்பிலான குறைகடத்தி உற்பத்தி துறையில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.