வேப்பேரியில் உள்ள சென்னைப் போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தில் உள்ள சாலைப் பாதுகாப்பு காட்சிக் கூடத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரால் ரோடியோ (Rodeo) என்ற இயந்திர காவல்துறை பணியாள் ரோபோ துவக்கி வைக்கப்பட்டது.
SP ரோபோட்டிக் வொர்க்ஸ் என்ற குழுமத்திலிருந்து 23 குழந்தைகள் அடங்கிய ஒரு அணி இந்த ரோபாவை வடிவமைத்திருக்கின்றது.
இந்த ரோபோ பார்வையாளர்களைச் சந்திக்கும் வகையில் சுழன்று வருவது மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான தவல்களை அளிப்பது போன்ற பலதரப்பட்ட செயல்களைச் செய்யும்.