அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, தெலுங்கானா அரசின் T-Hub என்ற புத்தாக்க தொழில்துறை காப்பக அமைப்புடன் இணைந்து, இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தினை (MATH) நிறுவ உள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு புத்தாக்கங்களை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தப் புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை வழங்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நுட்பச் சந்தையானது 25-35% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து வருகிறது என்ற நிலையில் மேலும் இது 2027 ஆம் ஆண்டிற்குள் 17 பில்லியன் டாலரை எட்டும்.