Sea6 எனர்ஜி நிறுவனமானது, உலகின் முதல் பெரிய அளவிலான இயந்திரமயமாக்கப் பட்ட வெப்பமண்டலக் கடற்பாசிப் பண்ணையை இந்தோனேசியாவின் லோம்போக் எனுமிடத்தில் தொடங்கியுள்ளது.
இந்தப் பண்ணையானது லோம்போக் தீவில் உள்ள ஏகாஸ் பகுதியில் அமைந்துள்ளது.
Sea6 எனர்ஜி என்பது பெங்களூரில் அமைந்துள்ள வெப்பமண்டலக் கடற்பாசி இனங்களை வளர்த்து செயல்முறைக்கு உட்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஆனது Sea Combine என்ற சாகுபடி செயல்முறையை உருவாக்கியுள்ளது.
இதைப் பயன்படுத்தி, ஆழ்கடல் நீரில் வளரும் கடற்பாசிகளை நன்கு அறுவடை செய்து மீண்டும் நடவு செய்ய இயலும்.