TNPSC Thervupettagam

இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் சார்ந்த வேலைவாய்ப்புகளில் முறையான வேலைவாய்ப்பு 2024

December 18 , 2024 31 days 87 0
  • இந்த அறிக்கையானது ரியாத் நகரில் நடைபெற்ற UNCCD அமைப்பின் COP 16 என்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது இந்தத் தொடரின் இரண்டாவது அறிக்கையாகும் என்பதோடு இதன் முதல் பதிப்பு 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகின் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் (NbS) சார்ந்த வேலைவாய்ப்புகளில் சுமார் 93-95 சதவீதம் ஆனது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் குவிந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) ஆனது இதில் முக்கியப் பங்காற்றுகிறது.
  • NbS மூலம் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மூலம் உலகளவில் பயனடைந்த 59 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர்.
  • 57 சதவீதச் செலவினம் ஆனது, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்படுகிறது,  அதே சமயம் ஆசிய-பசிபிக் பகுதியானது உலகளாவிய NbS செலவினத்தில் 44 சதவீதப் பங்கினை கொண்டுள்ளது.
  • உலகளவில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீதம் மட்டுமே NbS மூலம் பங்களிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்