TNPSC Thervupettagam

இயற்கை அன்னை - ஒரு 'உயிருள்ள நபர்'

May 3 , 2022 811 days 430 0
  • சென்னை உயர்நீதிமன்றமானது இயற்கை அன்னையை உயிர் வாழும் ஒரு நபரின் அனைத்து உரிமைகளும் கடமைகளும் பொறுப்புகளும் கொண்ட ஓர் உயிரினமாக அறிவித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில், உத்தரகாண்டில் உள்ள கங்கை, யமுனை, அவற்றின் துணை நதிகள் மற்றும் இந்த நதிகளுக்கு நீரினை அளிக்கும் பனிப்பாறைகள் மற்றும் நீர்ப் பிடிப்புகள் ஒரு உயிரினமாக உரிமைகளைக் கொண்டுள்ளன என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2018 ஆம் ஆண்டில், அதே உயர்நீதிமன்றம் ஒட்டு மொத்த முழு விலங்குக் குடும்பமும் உயிருள்ள ஒரு நபர் கொண்டுள்ள  அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது என்று ஒரு தீர்ப்பினை அளித்தது.
  • 2020 ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ஆனது சண்டிகர் நகரத்தில் உள்ள சுக்னா ஏரியை ஓர் உயிருள்ள அமைப்பாக அறிவித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்