TNPSC Thervupettagam

இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான இந்திய மன்றம்

July 7 , 2022 747 days 336 0
  • போலந்தில் நடைபெற்ற 11வது உலக நகர்ப்புற மன்றத்தில் இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான இந்திய மன்றம் தொடங்கப்பட்டது.
  • இந்த மன்றமானது பின்வருவனவற்றால் இணைந்து தொடங்கப்பட்டது
    • தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனம் (NIUA)
    • உலக வள நிறுவனம் - இந்தியா (WRI இந்தியா)
    • நகரங்களுக்கான பருவநிலை மையம் (NIUA C-Cube) மற்றும் அவற்றின் பங்குதார அமைப்புகள்.
  • இது நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான (NbS) இந்தியாவின் முதல் தேசிய அளவிலான கூட்டணித் தளமாகும்.
  • இது Cities4Forest என்ற முன்னெடுப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளை உருவாக்குவதற்கு உதவுவதற்காக நகர்ப்புற இயற்கை சார்ந்தத் தீர்வுகளுக்கான தொழில்முனைவோர், ஒத்த கருத்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒரு கூட்டாண்மையை உருவாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்