காபோனிய நாட்டின் குடியரசு ஆனது, 500 மில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை வளங்காப்பிற்கான கடன் பரிமாற்றத்தை அறிவித்துள்ளது.
இது நீல (கடல்சார்) பத்திரத்தின் கீழ் மறுநிதியளிப்பதற்காக கையெழுத்திடப்பட்ட உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஒப்பந்தம் ஆகும்.
ஆப்பிரிக்காவில், எந்தவொரு நாடும் தனது கடனுக்கு மறுநிதியுதவி அளிப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் கையெழுத்தான இத்தகைய மிகப்பெரிய ஒரு ஒப்பந்தம் இதுவாகும்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான செலவினங்களை மேற் கொள்வதற்கு வேண்டி அதிகக் கடனில் மூழ்கியுள்ள வளர்ந்து வரும் நாடுகள் ஒப்புக் கொண்டால், வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களின் உதவியைப் பெற்று, தங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு இயற்கை வளங்காப்பிற்கான கடன் பரிமாற்றங்கள் வழி வகுக்கின்றன.
பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வங்கிகள் இத்தகைய நாடுகளின் கடன்களை வாங்கி, தாமதமாக செலுத்தும் வகையிலான பல்வேறு புதிய கடன்களை வழங்குகின்றன.
இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் வழங்கப் படுகின்றன.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய இயற்கை வளங்காப்பிற்கான கடன் பரிமாற்ற ஒப்பந்தத்தில், நீலக் கடன் பத்திரத்தின் கீழ் காபோன் நாட்டின் கடன் அமைப்பானது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான உலகின் முதல் மற்றும் மிகப்பெரியக் கடன் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈக்வடார் கையெழுத்து இட்டுள்ளது.