இது ஜெர்மனியின் மத்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் (BMZ) நிலச் சீரழிவின் பொருளாதாரம் என்ற முன்னெடுப்பு, பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பினால் வெளியிடப்பட்டது.
இது COP27 மாநாடு முடிவடைந்த 10 நாட்களுக்குப் பிறகும் கனடா நாட்டின் மாண்ட்ரீயல் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பெருக்கம் (COP15 CBD) மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பும் வெளியிடப்பட்டது.
இயற்கை சார்ந்த தீர்வுகளில் (NbS) மேற்கொள்ளப்படும் தற்போதைய உலகளாவிய முதலீடு ஆண்டிற்கு 154 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இது 2025 ஆம் ஆண்டிற்குள் 384 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட வேண்டும்.
பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கும் பொருளாதார நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் இயற்கை சார்ந்தத் தீர்வுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை விட 3 முதல் 7 மடங்கு அதிகமாகும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மானியங்கள் எரிசக்தித் துறையில் அதிகம் வழங்கப்படுகின்றன.
வேளாண் துறையில் வழங்கப்படும் மானியங்கள் ஆண்டிற்கு சுமார் 500 பில்லியன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்த மானியங்களைப் படிப்படியாக நிறுத்துவதற்கு இந்த அறிக்கை பரிந்துரைத்து உள்ளது.