TNPSC Thervupettagam
October 6 , 2018 2245 days 705 0
  • ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் ஆனது கீழ்க்காணும் 3 விஞ்ஞானிகளை இயற்பியலுக்கான நோபல் பரிசிற்காக தேர்ந்தெடுத்துள்ளது.
    • ஆர்தர் ஆஷ்கின் (அமெரிக்கா)
    • ஜெரார்டு மௌரோ (பிரான்ஸ்)
    • டோன்னா ஸ்டிரிக்லேண்ட் (கனடா)
  • இவர்கள் லேசர் இயற்பியல் துறையில் சாதனை படைத்துள்ள கண்டுபிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இதுவரையில் நோபல் பரிசைப் பெற்ற மிக வயதான அறிவியலாளராக 96 வயதான ஆர்தர் ஆஷ்கின் உள்ளார்.
  • இவர் ஒளியியல் இடுக்கி மற்றும் உயிரியலில் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றிற்காக இப்பரிசைப் பெறுகிறார்.
  • ஜெரார்டு மௌரோ மற்றும் டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகிய இருவரும் தங்களது புதுமையான தொழில்நுட்பமான குற்றொலி துடிப்புப் பெருக்கத்தின் கண்டுபிடிப்பிற்காக (chirped pulse amplification- CPA) கூட்டாக பரிசு பெறுகின்றனர்.
  • 1903ல் மேரி கியூரி மற்றும் 1963ல் மரியா கோபர்பெர்ட்மேயர் ஆகியோருக்கு அடுத்து இயற்பியலில் நோபல் பரிசு பெறும் 3வது பெண்மணியாக டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்