TNPSC Thervupettagam
October 4 , 2017 2609 days 879 0
  • லிகோ ஆய்வகத்தில் பணிபுரியும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகளான ரெய்னர் வைஸ், பேரி பேரிஷ் மற்றும் கிப் தோர்னே ஆகியோருக்கு 2017 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • லேசர் ஒளியலை அளவுமானி புவியீர்ப்பு அலை நோக்குக் கூடம் எனப்படும் LIGO-விற்கு (Laser Interferometer Gravitational Waves Observatory) - அவர்கள் அளித்த தீர்க்கமான பங்களிப்பு மற்றும் அண்டவெளியில் ஈர்ப்பு அலைகள் உண்டாகுவதை உறுதி செய்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • அண்டவெளியில் கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதுதல், கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இணைந்து ஒரே நட்சத்திரமாக மாறுதல் போன்ற செறிவு கொண்ட பொருட்களின் மோதலின் போது உண்டாகும் மாபெரும் ஈர்ப்பு விசை அலைகள் அண்டவெளியில் அலைகளாக பரவும்.
  • ஓர் நூற்றாண்டுக்கு முன்பே ஐன்ஸ்டின் தன் "பொது சார்பியல் கோட்பாட்டின்" வழி அண்டவெளியில் ஈர்ப்பு அலைகள் இருப்பதை விளக்கினாலும் முதன் முதலில் 2015ல் மட்டுமே லிகோ உணர்மானியின் மூலம் கண்டறியப்பட்டது.
  • 3 மில்லியன் ஒலியாண்டு தொலைவில் உண்டான இரு கருந்துளைகளின் மோதலில் உண்டான இந்த ஈர்ப்பு அலை பரவலை லிகோ உணர்மானியின் மூலம் இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • 1 ஒளி ஆண்டு என்பது = 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர்.
  • 2015 லிருந்து லிகோ உணர்வி மூலம் இருமுறையும், இத்தாலியின் காஸ்சினாவிலுள்ள ஐரோப்பிய புவிஈர்ப்பு ஆய்வகத்தின் விக்ரோ உணர்வி ஒரு முறையும் என இது வரை மொத்தம் 3 முறை புவிஈர்ப்பு அலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்