TNPSC Thervupettagam
October 9 , 2023 266 days 374 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பருப்பொருளின் மின் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் அளவிலான அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக இது வழங்கப் பட்டுள்ளது.
  • இவர்களின் ஆராய்ச்சியானது, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் உள்ள எலக்ட்ரான்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கான புதிய கருவிகளை மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளது.
  • எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறை அல்லது ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் மிகக் குறுகிய துடிப்புகளை (அதிர்வுகளை) உருவாக்குவதற்கான வழிமுறையை அவர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர்.
  • இவர்களின் சோதனைகள், மிக குறுகிய காலக்கட்டத்தில், அதாவது அட்டோ செகண்டுகளில் - ஒரு வினாடியின் (10−18) குயின்டில்லியந்த், பத்தில் ஒரு பங்கு நேரத்தில் நடக்கும் நுண்ணிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு உதவுகிறது.
  • பேரண்டம் தோன்றியதில் இருந்து எத்தனை வினாடிகள் இருந்ததோ, அதே அளவு நேரம் ஒரு நொடியில் இருக்கும் அளவிற்கு ஒரு அட்டோசெகண்ட் மிகவும் குறுகியதாக இருக்கும்.
  • ஒளியின் இந்த குறுகிய துடிப்புகள் (அதிர்வுகள்) என்பவை அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் நிகழும் இயக்கங்கள் குறித்தப் படங்களை வழங்குவதற்குப் பயன்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்