ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் "பிரபஞ்சத்தில் பூமியின் இடம்" ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
இந்த விருதின் ஒரு பாதியானது "இயற்பியல் அண்டவியலின் கோட்பாடு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக" ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு வழங்கப் பட்டது.
இந்த விருதின் மற்றொரு பாதியானது "சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு வெளிக் கோளைக் கண்டுபிடித்ததற்காக" மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இவர்கள் 9 மில்லியன் க்ரோனர் (918,000 அமெரிக்க டாலர்) மதிப்புடைய நிதித் தொகை, தங்கப் பதக்கம் மற்றும் பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.