இயலாமை உடைய நபர்களுக்கான ஆசிய பசுபிக் பத்தாண்டின் சந்திப்பு
November 30 , 2017 2550 days 815 0
இயலாமை உடைய நபர்களுக்கான ஆசிய பசுபிக் பத்தாண்டின் [Asia and Pacific Decade for Persons with Disabilities -(2013-2022)] அரசுகளுக்கிடையேயான இடைக்கால மதிப்பீட்டு சந்திப்பு சீனாவின் பெய்ஜிங்-ல் நடைபெற்றது.
இயலாமை உடையவர்களின் சமூக உள்ளடக்குதலிலும், அவர்களுக்கு அதிகாரமளித்தலிலும் உள்ள சவால்கள் மற்றும் இடைவெளிகளை களைவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகள் இந்த சந்திப்பில் பங்கெடுத்து இதற்கான பிரகடனத்தை இறுதி செய்தன.
இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள்கள்
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தினில் இயலாமையுடையவர்களுக்கான “சரியான விஷயங்களை உண்மைப்படுத்துத்தல்” (to make the right real) எனும் Incheon உத்திகளின் மீதான உறுப்பு நாடுகளின் செயல் முன்னேற்றங்களை ஆசிய-பசுபிக் பத்தாண்டின் இடைக்காலமான 2017 –ல் ஆய்வு செய்தல்.
Incheon உத்திகள் மற்றும் 2030-ன் நீடித்த வளர்ச்சி இலக்குகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை இப்பிராந்தியத்தில் கட்டமைக்கத் தேவையான எதிர்கால செயற்கொள்கைகளை விவாதித்தல்.
சீனாவின் இயலாமை நபர்களுக்கான கூட்டமைப்போடு (China Disabled Persons Federation-CDPF) இணைந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. அவையின் பொருளாதார மற்றும் சமுக அமைப்பு (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) இந்த மாநாட்டை நடத்தியது.
Incheon உத்திகளானது, பிராந்திய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய வளர்ச்சி இலக்குகளின் முதல் தொகுப்பை உலகிற்கும், ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கும் வழங்குகிறது.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 650 மில்லியன் இயலாமையுடைய மக்களுள் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்ற நிலையில், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களுடைய உரிமைகளை பூர்த்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தேவையானவற்றை Incheon உத்திகள் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு வழங்கி அவற்றிற்கு உதவும்.
2022 –ல் முடிவடைய உள்ள இந்த ஆசிய பசிபிக் பத்தாண்டின் ஓவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உறுப்பு நாடுகளின் Incheon உத்திகளின் அமலாக்கத்தில் உள்ள முன்னேற்றங்களைப் பற்றி ஓர் அறிக்கையை கட்டாயம் UNESCAP-ன் செயலகம் ஐ.நா அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.