தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளைப் பாதுகாத்து வளர்க்கவும், தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இவர் 1991 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவராவார்.