இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு
August 26 , 2024
89 days
129
- இந்தியாவின் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டில் சுமார் 21.4% பங்குடன் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (15.7%) மற்றும் பஞ்சாப் (9.5%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் உயிரி-பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 3.4 மெட்ரிக் டன் (52.8 முதல் 56.2 மெட்ரிக் டன் வரை) குறைந்துள்ளது.
- இமாச்சலப் பிரதேசம் ஆனது அதன் இரசாயனப் பூச்சிக் கொல்லி நுகர்வினை 193 மெட்ரிக் டன் வரை (470 மெட்ரிக் டன்னிலிருந்து 277 மெட்ரிக் டன் ஆக) குறைந்துள்ளது.
- இம்மாநிலம் உயிரி-பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினை 0.23 மெட்ரிக் டன் (0.37 முதல் 0.60 மெட்ரிக் டன் வரை) என்ற அளவில் அதிகரித்துள்ளது.
- மேற்கு வங்காளமானது கடந்த ஒரு நிதியாண்டில் உயிரி-பூச்சிக் கொல்லியை மிகவும் அதிக அளவில் (1,574 மெட்ரிக் டன்) பயன்படுத்தியுள்ளது.
- அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (957 மெட்ரிக் டன்) மற்றும் சத்தீஸ்கர் (787 மெட்ரிக் டன்) இடம் பெற்றுள்ளன.
Post Views:
129