இரசாயனப் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவு தினம் - நவம்பர் 30
November 30 , 2023 362 days 169 0
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஒழிப்பதற்கான பல முயற்சிகளை ஊக்குவிப்பதும், அத்தகையப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதும் இந்த நாளின் நோக்கமாகும்.
இரசாயன ஆயுதங்கள் மற்றும் அவற்றிற்கு எதிரான சர்வதேசச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையானது 1675 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் கையெழுத்தானது.
இரசாயன ஆயுத உடன்படிக்கையானது 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.