TNPSC Thervupettagam

இரட்டை அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு

April 8 , 2018 2400 days 2149 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையானது, பஞ்சாயத்து ராஜ் (திருத்த) மசோதா 2018-னை நிறைவேற்றியதன் மூலம், அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைப்பிலிருந்து அஞ்சல் சமிதியை (இடைநிலை அடுக்கு) நீக்கி இரட்டை அடுக்கு பஞ்சாயத்து அமைப்பை மட்டும் ஏற்படுத்தி உள்ளது.
  • 73-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 20 லட்சத்தை விடக் குறைவான மக்கள் தொகையை கொண்ட மாநிலங்கள் இடையடுக்கு (Intermediate level) முறையை பஞ்சாயத்து அமைப்பில் கொண்டிருக்கத் தேவையில்லை எனக் கூறுகிறது. அருணாச்சலப்பிரதேசத்தின் மக்கள் தொகை84 லட்சம் ஆகும்.
  • மூன்று அடுக்கு (Three Tier) பஞ்சாயத்து அமைப்பு அருணாச்சலப் பிரதேசத்தில் 2003, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அடுத்த பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல்-மே 2018ல் நடைபெற உள்ளது.
  • இந்த இரண்டடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் கிராம மற்றும் மாவட்ட அளவிலான பஞ்சாயத்து அமைப்புகள் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதால் திட்டமிடுதல் மற்றும் செயலாக்கம் (Execution) செய்தல் ஆகியவை விரைவாக நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்