TNPSC Thervupettagam

இரட்டை ஒப்புதல் முறையில் இருந்து விலக்கு

November 21 , 2024 3 days 26 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆனது, தற்போது 'வெண்மைப் பிரிவு-மாசு ஏற்படுத்தாத' துறையானது இரண்டு முக்கிய அனுமதிகளைப் பெறாமல் தொழிற் சாலைகளை நிறுவவும் இயக்கவும் அனுமதிக்கிறது.
  • விதிகளுக்கான இணக்கச் சுமையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி ‘மாசுபாடு ஏற்படுத்தாத’ பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இரட்டை ஒப்புதல் முறையில் சுற்றுச்சூழல் அனுமதி (EC) மற்றும் புதியத் தொழில்களை அமைப்பதற்கான ஒப்புதல் (CTE) ஆகியவை அடங்கும்.
  • குறைந்தபட்ச அல்லது மிகக் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அதிகாரப் பூர்வமாக மதிப்பிடப்பட்ட தொழிற்சாலைகள் இத்துறை அமைச்சகத்தின் வெண்மைப் பிரிவிற்குள் அடங்கும்.
  • அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வப் பட்டியலில் இது போன்று மொத்தம் 39 தொழில் துறைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்