உலகின் முதல் இரட்டைக் கோபுர சூரிய சக்தி அனல் மின் நிலையத்தை சீனா தொடங்கியுள்ளது.
இது ஆற்றல் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துவதற்காக வேண்டி புதுமையான வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
இந்த ஆலையானது ஒவ்வொன்றிலும் சூரிய ஒளியைக் கோபுரங்களின் மீது ஒருங்கே செலுத்துவதற்காக ஒன்றுடன் ஒன்று இடையீடும் வகையில் அமைந்த சுமார் 30,000 கண்ணாடிகளால் சூழப்பட்டுள்ள சுமார் 200 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது.
இடையீடு பகுதியில் உள்ள கண்ணாடிகள் இரு கோபுரங்களாலும் மாற்றி மாற்றி பயன்படுத்தப் படும்.
ஒருங்கே சேர்ந்த சூரிய ஒளியானது கோபுரங்களுக்குள் உள்ள தண்ணீரைச் சூடாக்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக விசையாழிகளை இயக்குவதற்கு நீராவியை உருவாக்குகிறது.