TNPSC Thervupettagam

இரட்டை சில்வண்டு பெருக்கம்

January 20 , 2024 181 days 213 0
  • 221 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ நிகழ்வாக, இந்த ஆண்டு இரட்டை சில்வண்டு பெருக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
  • அடைக்காப்பில் இருந்த சில்வண்டுகளின் இரண்டு குழுக்கள் (ப்ரூட் XIII மற்றும் ப்ரூட் XIX) ஒரே நேரத்தில் நிலப்பரப்பில் இருந்து வெளி வந்துள்ளன.
  • பொதுவாக, அடைகாப்பினைப் பொறுத்து ஒவ்வொரு 13 அல்லது 17 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தப் பூச்சிகள் நிலத்தடிப் பரப்பில் இருந்து வெளிவரும்.
  • ஆனால் இந்த ஆண்டு, இந்த இரண்டு குழுக்களும் ஒன்றாக வெளிப்பட்டுள்ளன.
  • கடைசியாக லூசியானா பகுதி பெறப்பட்ட 1803 ஆம் ஆண்டில் இந்த அரிய சில்வண்டு இணை வெடிப்பு  நிகழ்ந்தது.
  • அடுத்ததாக அத்தகைய நிகழ்வு 421 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடக்கும்.
  • சில்வண்டுகள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களை நிலத்தடியில் கழிக்கும் பூச்சிகள் ஆகும்.
  • முழுமையாக வளர்ந்தவுடன், அவை உணவிற்காகவும் இனச்சேர்க்கைக்காகவும் மில்லியன் கணக்கில் வெளிவருகின்றன.
  • ப்ரூட் XIX சில்வண்டுகள் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும், அதே போல, ப்ரூட் XIII ஒவ்வொரு 17 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிலத்தடியில் இருந்து வெளி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்