TNPSC Thervupettagam

இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம்

March 21 , 2018 2442 days 793 0
  • வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் (Curbing Tax Evasion), இரு நாடுகளுக்குமிடையே   முதலீட்டுப் போக்கை  (Flow of investment) ஊக்குவிப்பதற்கும் இந்தியா மற்றும் ஹாங்காங் ஓர் இருதரப்பு இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (Bilateral double taxation avoidance treaty) கையெழுத்திட்டுள்ளன.
  • ஹாங்காங்கானது இந்தியாவின் முக்கிய நிதியியல் மற்றும் வர்த்தக கூட்டுப் பங்களிப்பாளராகும்.
  • முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வகிப்புப் பிராந்தியமாகும் (Special Administrative Region). இது உயர்நிலை தன்னாட்சியை (High degree of autonomy) அனுபவித்து வருகின்றது.
  • இதன் மூலம் ஹாங்காங் தன்னிச்சையான வரிவிதிப்பு முறையைக் (Independent Taxation System) கொண்டுள்ளது.
  • நிதி ஏய்ப்புத் தடுப்பு (Prevention of Fiscal Evasion) மற்றும் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தமானது ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்கும் (Hong Kong Special Administrative Region - HKSAR), இந்தியாவிற்கும் இடையே முதலீட்டுப் போக்கை அதிகரிப்பதோடு இவ்விரண்டிற்குமிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில் வல்லுநர்களின்  பரிமாற்றத்தை அதிகரிக்கும்.
  • மேலும் இது தனிப்பட்ட வரி விதிப்பு அமைப்பையும் (Independent taxation system) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்