பூமியின் வளிமண்டலத்தில் நிகழும் விண்வெளிச் சார்ந்த வானிலை நிகழ்வுகளின் விளைவுகளைப் பற்றித் தகவல் சேகரிப்பதற்காக இஸ்ரோ ஒரு இரட்டை வளிமண்டல வியல் ஆய்வுக் கலனை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
பூமியின் உயரடுக்கு வளிமண்டலத்தில் விண்வெளி சார்ந்த வானிலை நிகழ்வுகளால் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு DISHA-H&L ஆய்வுப் பணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் அனுப்பப்படும்.
உயர் சாய்வு சுற்றுப்பாதையில் ஒன்றும் (DISHA-H)
தாழ்மட்ட சாய்வு சுற்றுப்பாதையில் ஒன்றுமாக (DISHA-L) இவை நிலை நிறுத்தப் படும்.
DISHA என்பது ''Disturbed and Quiet time Ionosphere-Thermosphere systems at High Altitudes' என்பதன் சுருக்கமாகும்.