இந்திய கிரிக்கெட் வீரர் சுமன் கில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
தனது சக வீரர் இஷான் கிஷானை (24 வயது 145 நாட்கள்) விஞ்சியதன் மூலம் இந்தச் சாதனையை எட்டிய இளைய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் கில் ஆவார்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெய்ல், ஃபகார் ஜமான் மற்றும் மார்ட்டின் குப்தில் ஆகியோர் தலா ஒரு இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.