இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தின் பங்களிப்பிற்கு இத்தாலி அரசின் அங்கீகாரம்
July 26 , 2023 489 days 240 0
இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியப் படைப்பிரிவுகளுடன் போரில் ஈடுபட்ட இந்தியப் படைப் பிரிவினர்களுக்கு மிகவும் கௌரவமளிக்கும் வகையில் இத்தாலியில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தின் ஒரு குறிக்கோள் முழக்கம் ஆனது, “We all live under the same sun” என்பதாகும்.
உயர்மட்ட டைபர் பள்ளத்தாக்கின் மலைப்பகுதிகளில் நடந்த மோதலில் கொல்லப் பட்ட விக்டோரியா கிராஸ் விருதினைப் பெற்ற நாயக் யஷ்வந்த் காட்ஜ் அவர்களின் நினைவாக இந்த நினைவிடத்திற்கு பெயரிடப்பட்டது.
4வது, 8வது மற்றும் 10வது படைப் பிரிவுகளைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றனர்.