TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜப்பானின் முதல் கடற்படைப் பிரிவு

April 21 , 2018 2284 days 642 0
  • ஜப்பானின் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவத் தலைமையான ஜப்பானிய சுய-பாதுகாப்புப் படை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான தன்னுடைய முதல் கடற்படைப் பிரிவை தென்-மேற்கு யூசு தீவுகளில் அமைந்துள்ள சாசேபோவுக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தில் செயல்பாட்டுக் கொண்டு வந்துள்ளது.
  • நீர்நில துரிதப் படை என அழைக்கப்படுகின்ற புதியதாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு மற்ற நாட்டுப் படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தீவுகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் வேற்று நாட்டுப்படைகளை விரட்டியடித்தல் போன்ற தன்மைகளைக் கொண்டுள்ளது.
  • ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான தன்னுடைய அரசியல் நிர்ணயக் கொள்கையில் போர் தொடுப்பதற்கான உரிமையைத் தவிர்த்தது.
  • நீர்நில துரிதப் படையை சீனாவிற்கு எதிரான தன்னுடையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கிழக்கு சீன கடல் பகுதிகளில் காணப்படும் பாறைகளாலான, மனிதர்கள் வாழாத தீவுச் சங்கிலிகளாக, பெய்ஜிங்கில் டியாவோயு தீவுகள் என்றும் டோக்கியோவில் சென்காகு என்றும் அறியப்படும் இத்தீவுகள் தொடர்பாக சீனா மற்றும்  ஜப்பான் இடையே நீண்ட வரலாறுடைய பிராந்தியப் பிரச்சினைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்