TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப்போர் நினைவு அருங்காட்சியகம்

January 29 , 2018 2363 days 800 0
  • இரண்டாம் உலகப்போர் நினைவு அருங்காட்சியகம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சங்லாங் (Changlang) மாவட்டத்தில் துவங்கப்பட்டது. மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியத்தை அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கந்தூ துவங்கி வைத்தார்.
  • பழம்பெரும் வரலாறு பெற்ற ஸ்டில்வெல் சாலையை அடுத்து அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இரண்டாம் உலகப்போரின் போது உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக மத்திய கலாச்சார அமைச்சகம் கட்டியுள்ளது.
  • இந்த அருங்காட்சியகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள், படைவீரர்களின் உடைமைகள் மற்றும் தங்ஸா (Tangsa) இன மக்களின் பழம்பெரும் பொருட்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்