இரண்டாம் கட்ட உந்துவிசை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு 2024
July 31 , 2024 116 days 147 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, இரண்டாம் நிலை உந்து விசை ஏவுகணைப் பாதுகாப்பு (BMD) அமைப்பின் வானியக்கச் சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இது 5,000 கி.மீ அளவிலான வரம்புடைய உந்துவிசை ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ள உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆயுத அமைப்பாகும்.
இரண்டாம் கட்ட மேம்பட்ட அமைப்பானது வளிமண்டலத்திற்குள்ளேயே இலக்குகளை எதிர்கொள்ளும் ஏவுகணையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு நிலை கொண்ட ஒரு திட எரிபொருள் மூலமான உந்து விசையுடன் நிலத்தில் இருந்து ஏவப் படுகின்ற ஏவுகணை ஆகும்.
2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் உனது விசை ஏவுகணைகளை எதிர்கொள்ளக் கூடிய BMD பாதுகாப்பு அமைப்புகளின் முதல் கட்டம் ஆனது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.