TNPSC Thervupettagam

இரண்டாம் காலாண்டில் (2024-25) தமிழ்நாடு மாநில அரசின் கடன்கள்

July 3 , 2024 144 days 310 0
  • 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 24,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காக, மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசுச் சந்தையில் இருந்து கடன் வாங்குகிறது.
  • மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
  • தமிழக அரசானது, மாநில நிதிநிலை அறிக்கையின் படி 2024-25 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெற்று, 49,638.82 கோடி ரூபாயினைத் திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்றைய நிலவரப் படி, நிலுவையில் உள்ள கடன் மதிப்பு ஆனது 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற நிலையில் இது 2024-25 ஆம் நிதியாண்டில் மொத்த உள்மாநில உற்பத்தியில் 26.41% ஆகும்.
  • இது நிதி ஆணையங்கள் வகுத்துள்ள அளவுகளுக்குள் உள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசானது 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்