இத்தாலியில் நடைபெற்ற கிரெடெய்ன் ஓபன் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் இரண்டாவது இளைய மற்றும் இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டராக 12 வருடம் 10 மாதங்கள் பூர்த்தியடைந்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞனந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
1990ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 12 வருடம் 9 மாதங்கள் பூர்த்தியான உக்ரைனைச் சேர்ந்த செர்கேய் கர்ஜாகின் உலகின் இளைய கிராண்ட் மாஸ்டராக உருவாகினார்.
பிரக்ஞானந்தா ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உலக ஜூனியர் போட்டியில் தன் முதல் கிராண்ட் மாஸ்டர் விதிகளை எட்டி சாதனைப் படைத்தார். தன் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் விதிகளைக் கிரீஸில் எட்டினார்.
உலகின் சதுரங்க கிராண்ட் மாஸ்டராக உருவாக 2500 எலோ புள்ளிகளையும், மூன்று கிராண்ட் மாஸ்டர் விதிகளையும் எட்ட வேண்டும்.