TNPSC Thervupettagam

இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கை

April 29 , 2021 1180 days 509 0
  • ஐக்கிய நாடுகள் சமீபத்தில் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது உலகம் முழுவதிலிருந்தும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளால் நியமிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அறிவியலாளர்களின் உழைப்பாகும்.
  • இந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கையின் தொடர்ச்சி ஆகும்.

முக்கிய தகவல்கள்

  • இதன் படி பெருங்கடல்களில் உயிரற்ற பகுதிகளின் (Dead Zone) எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளன.
  • 2008 ஆம் ஆண்டில் 400 ஆக இருந்த உயிரற்ற பகுதிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 700 ஆக அதிகரித்துள்ளது.
  • 90% சதுப்புநிலக் கடல்புற்கள் மற்றும் ஈரநிலத்தின் தாவர இனங்கள் பெரும் அழிவினை எதிர்நோக்கியுள்ளன.
  • 30% கடல்பறவை இனங்கள் அழிவின் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
  • 10% பெருங்கடல் மட்டுமே ஆராயப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
  • 1990 ஆம் ஆண்டிலிருந்து பெருங்கடல்களில் நிலவும் வெப்பத்தின் அளவு இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாகியுள்ளது.
  • 15% மணல் நிறைந்த கடற்கரைகள் பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளன.

உயிரற்ற பகுதி

  • ஒரு உயிரற்ற பகுதி என்பது ஆக்சிஜன் குறைபாட்டினை (ஹைபாக்சியா) குறிக்கும் ஒரு சொல்லாகும்.
  • மிகப்பெரிய உயிரற்ற பகுதி அரபிக்கடலில் அமைந்துள்ளது
  • இது ஓமன் வளைகுடாவில் கிட்டத்தட்ட 63,700 சதுர மைல்களை உள்ளடக்கியது போலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்